About Holyface(இயேசுவின் திரு முகம் பற்றி)

1945- ஆம் ஆண்டில் இறையடி சேர்ந்த அருட்சகோதரி பியரினா என்னும் ஒரு பெண் துறவி, தூய அன்னையாலும் இயேசுக் கிறிஸ்துவாலும் திருமுகப் பக்தியைத் தீவிரமாகப் பரப்புமாறு வலியுறுத்தப்பட்டார். கன்னத்தில் அறையப்பட்டவராய், காறி உமிழப்பட்டவராய், யூதாசினால் முத்தமிடப்பட்டவராய், தமது பாடுகளின் போது இயேசுவிற்கு இழைக்கப்பட்ட எல்லாவித அவதூறுகளுக்குப் பரிகாரமாகவும், மேலும் நற்கருணை ஆண்டவருக்கு நாள்தோறும் நிகழ்கின்ற நிந்தை, ஏளனம், பக்திக்குறைவு, இன்ன பிற அவமானங்களுக்குப் பரிகாரமாகவும் இந்தத் திருமுகப் பக்தி அவசியமானது என்று அந்த அருட்சகோதரிக்கு எடுத்துரைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட பதக்கத்தின் ஒருபுறத்தில், தூய மூடுதுகிலில் காணும் முகச்சாயலும், "இறைவா, உமது திருமுகத்தின் பேரொளி எம்மீது சுடர்வதாக !" (திருப்பாடல் 66:1) என்னும் வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தன. பதக்கத்தின் மறுபுறத்தில் "ஆண்டவரே, எம்முடன் தங்குவீராக!" என்னும் சொற்களை ஏந்தியவாறு, ஒளிரும் தூய அப்பம் ஒன்று தோற்றமளித்தது.